விஜய் கட்சியுடன் இணைய மாட்டோம் - துரைவைக்கோ பேட்டி

78பார்த்தது
ம. தி. மு. க. முதன்மைச் செயலாளர் துரைவைக்கோ ஆரல்வாய் மொழியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: - தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க மறுப்பதால் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் விடுபட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வந்தது, காலை உணவு திட்டம், ஸ்மார்ட் கிளாஸ் என அனைத்து திட்டமும் தமிழக அரசால் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு இந்தியாவுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறது.

பழனியில் முருகன் மாநாடு நடத்தியதை தனிப்பட்ட முறையில் நான் வரவேற்கிறேன். முருகன் தமிழ் கடவுள் மட்டும் கிடையாது. இதில் தமிழ் கலாச்சாரமும் ஒன்றிணைந்து இருக்கிறது. தமிழகத்தில் ஒருபோதும் தி. மு. க. தலைமையிலான கூட்டணி மாறாது. கூட்டணி மாற்றம் என்ற நிலையை தி. மு. க. தலைமை ஒருபோதும் எடுக்காது.

நாங்கள் தி. மு. க. கூட்டணியில் இருக்கிறோம். தி. மு. க. மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி இருக்க நாங்கள் ஏன் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். அந்த சிந்தனை ஒருபோதும் கிடையாது இவ்வாறு அவர் கூறினார்.
Job Suitcase

Jobs near you