இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் நிறைவடைந்த சூழலில் இதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் பல்வேறு விதமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்த குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளை நிர்வாகிகள் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் நடத்தினர் இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர் மேலும் இன்றைய தினம் இந்த அமைப்பின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரத்த தான முகாம்கள் செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.