கடையாலுமூடு பகுதியில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலுக்கு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ஐந்தரை கிலோ எடையுள்ள வெண்கல மணி ஒன்று அங்கு நிறுவப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கோவில் மணி திருட்டு போனது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் விசாரித்த போது, வேர்கிளம்பி அருகே கல்லன் குழி பகுதியை சேர்ந்த ராபின்சன் (64) என்பவர் கோயில் மணியை திருடி சென்றது தெரிய வந்தது.
இதை அடுத்து கோவில் நிர்வாகிகள் கடையாலுமூடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் ராபின்சனை பிடித்து விசாரித்தனர். இதில் சுவர் கோயில் மணியை திருடி, கடையாலுமூடு பகுதியில் உள்ள ரப்பர் வியாபாரம் செய்து வரும் சௌந்தர் என்பவரிடம் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ராபின்சன் மற்றும் சவுந்தரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.