பைங்குளம்: கால்வாய் பக்க சுவர் பணியை துவக்கிய எம்எல்ஏ
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிற்றாறு பட்டணம் கால்வாயின், தேங்காப்பட்டணம் துணை பகிர்மான கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் காக்கறவிளை பகுதியில் கால்வாய் பக்கச்சுவர் மற்றும் மூடி அமைத்து சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ரூ. 9 - லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் கட்டுமான பணியினை ராஜேஷ்குமார் எம்எல்ஏ துவக்கி வைத்தார். பைங்குளம் ஊராட்சி தலைவர் விஜயராணி உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.