திருவட்டார் ஆதிகேசவன் கோவிலில் நள்ளிரவில் சிறப்பு கலச பூஜை

50பார்த்தது
வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார்  ஆதிகேசவப்பெருமாள் கோவலில் கிருஷ்ன ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் கருவறை முன்பு அமைந்துள்ள உதய மார்த்தாண்ட மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தொட்டிலில் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பலராமன் விக்கிரகங்கள் வைத்து தாலாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

பெண்கள் மற்றும்  பக்தர்கள் ஆர்வமுடன் தொட்டிலில் இருந்த கிருஷ்ணன், பலராமன் ஐம்பன் விக்ரகங்களை பார்த்து ரசித்து தொட்டிலை ஆட்டி மகிழ்ந்தனர். மாலையில் நடந்த தீபாராதனையின்போது ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.  

நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு   கலச பூஜை நடைபெற்றது. தொடர்ந்து  அலங்கார தீபாராதனை நடை பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி