பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

52பார்த்தது
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் கடந்த 20ஆம் தேதி முதல் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளுக்கான நீர் வரத்தும் அதிகரித்தது. இதனால் மலை கிராமங்களில் உள்ள நீரோடைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் மோதிரமலை, மாங்கா மலை, முடவன் தூக்கி, தச்சமலை உள்ளிட்ட மலையோர கிராமங்கள் அடியோடு முடங்கிப் போனது.

குறிப்பாக மோதிரமலை -  குற்றியாறு இடையிலான தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் மலைகிராம மக்கள் முற்றிலும் பாதிப்படைந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் உடனடியாக தற்காலிக பாரம் சீரமைக்கப்பட்டு,  தற்போது பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் மழை அளவு குறைந்து உள்ளது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் அணையில் இருந்து 1055 கன அடி நீர் திறந்து விட்ட நிலையில் நேற்று உபரி நீர் திறக்கப்படவில்லை. இதனால் ஆறுகளில் தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி