

கடமலைபுத்தூரில் உள்ள பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
கடமலைபுத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் செங்கல்பட்டு மாவட்டம் கடமலைபுத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ராம நவமி கர்ப்ப உட்சவ பெருவிழா மற்றும் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சுவாமி திருக்கல்யாண வைபவ விழாவை முன்னிட்டு கோ பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு சுவாமிக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் பட்டாட்சியர்கள் கலந்துகொண்டு சுவாமி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்து ராமாயண சொற்பொழிவு ஆற்றினர். சுவாமி திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் கொண்டிருந்தது. இந்த திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.