மதுராந்தகத்தில் பசுமை தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
மதுராந்தகத்தில் பசுமை தாயகம் சார்பில் அனைத்து நீர் நிலைகளையும் பாதுகாக்க வேண்டியும் சதுப்பு நில விதியை நடை முறைப்படுத்த வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம்


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் பசுமை தாயகம் சார்பில்பசுமை தாயகம் மாநில இன செயலாளர் கண்ணன் தலைமையில் இன்று மதுராந்தகம் ஏரியில்சுமார் 50 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளை ஆழப்படுத்தி பாதுகாக்க வேண்டும்

2017 யில் ஒன்றிய அரசு அறிவித்த சதுப்பு நில வாரியத்தின் விதிகளை நடை முறைப்படுத்தாமல் தமிழக அரசு கிடப்பில் போட்டு உள்ளது இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
உலக தண்ணீர் தினமான மார்ச் 22ஆம் தேதி அதை முன்னிட்டு வரும் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் இந்த தீர்மானத்தை கிராம சபையில் நிறைவேற்ற வேண்டும்
இம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம புறங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் பசுமை தாயகம் சார்பில் நடைபெற உள்ளது
பல மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் இப்பொழுது குப்பை கிடங்காக மாறி வருகிறது இதையும் தமிழக அரசு கண்டறிந்து குப்பைகளை அகற்றி ஏரியை நீர்நிலைகளை ஆழப்படுத்தி பாதுகாத்து நிலத்தடி நீர் மட்டும் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி