இலத்தூர் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம்!

64பார்த்தது
இலத்தூர் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்!


காஞ்சி தெற்கு மாவட்டம் இலத்தூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் எம். எஸ். பாபு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் ஏற்பாட்டில் புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பாக அமைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கிப்பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல்மாலிக், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் தசரதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முதலமைச்சர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி