கூவத்தூர் அருகே அரசு விரைவு பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிச்சேரி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டு இருந்தபொழுது மரக்காணம் என்ற இடத்தில் அரசு விரைவு பேருந்து பழுதாகி நின்றுள்ளது.
இதை அடுத்து மரக்காணத்தில் பழுதாகி நின்ற அரசு விரைவு பேருந்தை ஓட்டுனர் தியாகராஜன் மற்றும் நடத்துனர் மனோகரன் ஆகியோர் மரக்காணத்திலிருந்து கோயம்பேடு நோக்கி கிழக்குக் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது கூவத்தூர் என்ற இடத்தில் அரசு விரைவு பேருந்து திடீரென தீ பற்றி எறிய தொடங்கியது.
இதை எடுத்து அரசு விரைவு பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்து இறங்கி விட்டனர்.
இதையடுத்து செய்யூர் மற்றும் கல்பாக்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ பற்றி எரிந்த அரசு விரைவு பேருந்தின் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த அரசு பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும் மேலும் இந்த அரசு விரைவு பேருந்து தீ விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.