அச்சரப்பாக்கத்தில் வெறிச்சோடிய மின் நுகர்வோர் முகாம்

73பார்த்தது
அச்சரப்பாக்கம் கோட்டம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பொதுமக்களின்றி வெறிச்சோடியது


செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் பொதுமக்களுக்கு மின் கட்டணம், மின்மோட்டார், குறைந்த மின்னழுத்தம், சேதம் அடைந்த மின் கம்பம் ஆற்றுதல் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க இன்று சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு மின்வாரியம் சார்பில் முகாமை பற்றி எந்த முன் அறிவிப்பும் அறிவிக்காததால் இந்த முகாமில் பொதுமக்கள் எவரும் வராததால் மின்வாரிய அதிகாரிகள் அவர்கள் செல்போனில் பார்த்தபடி அமர்ந்திருந்தனர் கண் துடிப்புக்காகவே இதுபோன்ற முகாம்களை நடத்தப்படுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி