ஸ்ரீ பெரும்பதூர் - Sri Perumbadhur

தோண்டாங்குளம் ஏரி துார்வார கோரிக்கை

தோண்டாங்குளம் ஏரி துார்வார கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட தோண்டாங்குளம் கிராமத்தில், ஒன்றிய கட்டுப்பாட்டில் 90 ஏக்கர் பரப்பளவிலான ஏரி உள்ளது. இந்த ஏரி நீரால், அப்பகுதியில் உள்ள 130 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.  இந்த ஏரி கடந்த பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால், நீர் பிடிப்பு பகுதிகள் துார்ந்துள்ளன. இதனால், மழைக்காலத்தின் போது, ஏரியில் போதுமான தண்ணீர் சேகரிக்கப்படாத நிலை இருந்து வருகிறது. ஏரியில் குறைவான அளவு தண்ணீர் சேகரிக்கப்படுவதால், அத்தண்ணீரைக் கொண்டு இறுதிக்கட்ட சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.  எனவே, தோண்டாங்குளம் ஏரியை துார்வாரப்படுத்தி, கரைப் பகுதி மற்றும் மதகுப் பகுதிகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా