செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் புறவழி சாலையில் நள்ளிரவு திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த லாரி டயர் வெடித்து பொழுதாகி நின்றது. சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் தர்பூசணி லாரி சாலையில் கவிழ்ந்தது. சாலை முழுவதும் தர்பூசணி பழங்கள் உருண்டோடியது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் உருண்டு தர்பூசணி பழங்களை பேருந்தில் வந்தவர்கள் மற்றும் வாகனத்தில் வந்தவர்கள் அள்ளிச் சென்றனர்.