பிள்ளைபோல வளர்த்து வரும் பசுவுக்கு உரிமையாளர் வளைகாப்பு நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. அங்குள்ள ஹசன் மாவட்டம் சன்னபட்டனாவைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் கர்ப்பமான பசுவுக்கு ரூ.1.3 லட்சம் செலவழித்து வளைகாப்பு நடத்தியுள்ளார். 500 நபர்களுக்கு தடபுடல் விருந்து வைத்து வளைகாப்பு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளார். தினேஷின் நண்பர்கள் & உறவினர்கள் நேரில் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.