செங்கல்பட்டில் மனு அளிக்க முடியாமல் காத்திருக்கும் மக்கள்

56பார்த்தது
மக்கள் குறைத்தீர் முகாமில் மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வராததால் மனு அளிக்க முடியாமல் வளாகத்தில் காத்திருக்கும் மக்கள்

மாவட்ட ஆட்சியர் வருகைக்காக உட்காரக்கூட இடமில்லாமல் நீண்ட நேரமாக தரையில் அமர்ந்திருக்கும் பயனாளிகள்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுவது வழக்கம் இந்த முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களது கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக எழுதி ஆட்சியரிடம் நேரடியாக வழங்குவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கிய முகாமில் தற்பொழுது ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை ஒரே ஒரு அதிகாரி மட்டும் வந்த நிலையில் ஆட்சியர் அருண் ராஜ் உட்பட எந்த அதிகாரியும் முகாமிற்கு வராததால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் மனு அளிக்க முடியாமல் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் சூழல் ஆனது ஏற்பட்டுள்ளது

அதேபோல நலத்திட்ட உதவிகள் பெற இருக்கும் பயனாளிகள் காலை முதலே ஆட்சியர் அலுவலகத்தில் வந்த நிலையில் அவர்களுக்கு உட்கார நாற்காலி கூட இல்லாமல் தற்போது நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த நிலையில் தற்போது ஆட்சியர் அலுவலகக் கூட்ட அறிந்தில் தரையில் அமர்ந்து ஆட்சியர் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் சூழலானது உருவாக்கியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி