தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் இல்லம் திருச்சி மாவட்டம் தில்லை நகரில் அமைந்துள்ளது. அங்கு இன்று (ஏப்ரல். 07) வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் அனைவரும் கேரளா மற்றும் மதுரையில் இருந்து வந்துள்ளனர். நேருவின் வீட்டின் சோதனை நடைபெறுவது போலவே அவரின் மகன், சகோதரர்கள் மற்றும் சகோதரி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.