திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் தனியார் பள்ளியின் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் இர்பான். இன்று காலை வழக்கம்போல சைக்கிளில் பள்ளிக்குச் சென்றவரை மர்ம கும்பல் வழிமறித்து வயிறு, நெஞ்சு பகுதியில் குத்திக்கொலை செய்தனர். தப்பி ஓடியவர் அங்குள்ள வீட்டின் முன்பு விழுந்து உயிரிழந்தார். காலை 8 மணியளவில் நடந்த கொடூரம் குறித்து வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.