அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு!
காஞ்சி தெற்கு மாவட்டம் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றியம் கடமலைபுத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் 72வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சி தெற்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார் ஏற்பாட்டில் ஒன்றிய கழக செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கோகுலகண்ணன், ஒன்றிய கவுன்சிலர் பொன்மலர்சிவகுமார், உள்ளிட்ட ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.