செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வையாவூர் பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய தங்கமணி கடந்த நான்காண்டு காலமாக திராவிட அரசு அம்மாவின் அனைத்து திட்டங்களையும் நிறுத்தி வைத்துள்ளதாகவும் உங்களுக்கு பயன்பெறும் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதியை திராவிட மாடல் அரசு கட்டவிழ்த்து விட்டு உள்ளதாகவும் மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டத்தையும் திமுக அரசின் நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது எனும் குற்றச்சாட்டை தெரிவித்தார் மேலும் திராவிட மாடல்ல அரசு அளித்த தேர்தல் வாக்குறுதி இதுவரை செயல்படுத்தப்படாமல் இருப்பது என்றும் மக்களை ஏமாற்றும் விதமாக வரும் தேர்தலை மனதில் கொண்டு தற்போதைய பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.