மதுராந்தகம் அருகே
பெரும்பேர்கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா
நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெரும்பேர்கண்டிகை
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
பள்ளி கல்வித்துறை சார்பில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை தாங்கினார்
பெரும்பேர்கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர்
சாவித்திரிசங்கர்
முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய
குழு பெருந்தலைவர் ஒரத்தி கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பள்ளி நூற்றாண்டு விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி
பெற்ற மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்
சான்றிதழ் கேடயம் உள்ளிட்ட
பரிசுகளை வழங்கினார்.