தர்மபுரி: வருவாய் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட உங்கள் ஊரில் உங்கள் திட்டத்தின் கீழ் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று அக்டோபர் 16 மாலை நேரில் ஆய்வு செய்தார். இதில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள வீட்டுமனை பட்டா வழங்குதல் பணிகள் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அரியகுளம் இந்திரா நகர் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க ஏதுவாக மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டார்.