வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் சொந்தமாக வீடு கட்ட முடியாதவர்களுக்காக கொண்டுவரப்பட்டது தான் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டம். இந்தத் திட்டத்தில் 60% நிதியை மத்திய அரசும், 40% நிதியை மாநில அரசும் ஒதுக்கீடு செய்கின்றன. ஒரு வீட்டின் மொத்த மதிப்பீடு ரூ.1,70,000 ஆகும். இதில் மத்திய அரசு நிதி ரூ.72,000, மாநில அரசு நிதி ரூ.48,000, மேற்கூரை அமைக்க மாநில அரசின் கூடுதல் நிதி ரூ.50,000 வழங்கப்படுகிறது.