தமிழகத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர். இங்கு நீலகிரி மலையில் உள்ள தொட்டபெட்டா (2636மீ) மாநிலத்திலேயே மிக உயரமான சிகரமாகும். கிழக்கு திசையில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி கிழக்கு தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளது. இது காவிரி நதியால் குறுக்கிடப்பட்ட ஒரு தொடர்ச்சியற்ற மலைத்தொடராகும். இந்த இரண்டு மலைத்தொடர்களும் தமிழகத்தின் கேரளா மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள நீலகிரி மலைகளில் சந்திக்கின்றன.