Mahindra Thar Roxx: ஒரு மணி நேரத்தில் 1.76 லட்சம் கார்கள் புக்கிங்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Mahindra Thar Roxx காருக்கான முன்பதிவுகள் இன்று (அக்.3) தொடங்கியது. காலை 11 மணிக்கு தொடங்கப்பட்ட முன்பதிவு, வெறும் ஒரு மணிநேரத்தில் 1,76,281 கார்களுக்கு புக்கிங் செய்யப்பட்டு உள்ளன. இந்த வெற்றிக்கு பிராண்டின் வலுவான வாடிக்கையாளர் தளம் மற்றும் அவரது குழுவின் முயற்சிகள் தான் காரணம் என மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.