பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 29 வயது பெண்ணும், அவரது 30 வயது நண்பரும் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மனைவியின் போனில் தான் பெற்ற மகளின் ஆபாச விடியோவை பார்த்த சிறுமியின் தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த சிறுமியின் தாய் கடந்த ஒரு ஆண்டாக இந்த இளைஞருடன் தகாத உறவில் இருந்தது தெரியவந்துள்ளது.