
டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சு தேர்வு
IPL 2025 இன்றைய லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா அணி முதல் பேட்டிங் செய்யவுள்ளது. இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடிய மும்பை அணி இரண்டிலும் தோற்று 0 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி, இரண்டு போட்டிகளில் 1ல் வென்று 2 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.