வங்கதேச கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் தமீம் இக்பால் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு அவரது உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வங்கதேசத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு தமீம் இக்பால் ஒருவருக்கு இதய ஸ்டென்ட் பொருத்த உதவியது தெரியவந்துள்ளது.