காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரையிலும் சென்றிருக்கிறோம். பிரச்னையை நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இது தொடர்பாக அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுதும் பேசிக்கொண்டு தான் இருந்தீர்கள். நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழக அரசின் அனுமதி இல்லாமல் எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.