வீரப்பெருமாநல்லூர்: பகுதியில் பரவலாக மழை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. பின்னர் மதியம் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.