பண்ருட்டி: எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஷோரனூர் அருகே தொடர்வண்டி மோதியதில் தொடர்வண்டித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுத் தொழிலாளர்களாக பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிற்சியளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு உரிய இழப்பீட்டையும், நிரந்தர வேலை வாய்ப்பையும் பெற்றுத் தர ஒன்றிய அரசையும், கேரள மாநில அரசையும் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.