தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் துறை தலைமையக ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி கபில் குமார் ஷரத்கர் சென்னை அமலாக்கப் பிரிவு ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக சீமா அக்ரவால் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் 8 ஐபிஎஸ் அதிகார்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.