கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் நத்தப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள சவுக்கு தோப்பில் 7 பேர் கொண்ட ஒரு கும்பல் பதுங்கி இருந்தது. அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் தோட்டப்பட்டை சேர்ந்த திவாகர், ஞானவேல், விக்ரம், நத்தப்பட்டை சேர்ந்த சின்னா, இளங்கோ, பிரதீப் மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரியவந்தது. இவர்கள் கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.