செல்போனை பிடுங்கியதால் 16 வயது சிறுவன் தற்கொலை

54பார்த்தது
செல்போனை பிடுங்கியதால் 16 வயது சிறுவன் தற்கொலை
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் 16 வயது சிறுவன் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார். இதனைக் கண்டித்த பெற்றோர், சிறுவனிடம் இருந்த செல்போனை பிடுங்கியுள்ளனர். மேலும், அவர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பி, கூடுதல் வகுப்புகளில் பெற்றோர் சேர்த்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி