கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேம்பாலம் கட்டும் இடத்தில் பள்ளமாக உள்ளதால் அப்பகுதியில் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் அப்பகுதியில் பாலம் கட்டி முடிக்கும் வரை தடுப்பு கட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.