கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் அருகில் உள்ள தனியார் திருமண மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் பாமக மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மே-11 சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு தொடர்பான பேசப்பட்டது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா. அருள்மொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் மருத்துவர். இரா. கோவிந்தசாமி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில தலைவர் கோ. ஆலயமணி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.