கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் அருகே திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.