கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர் மாற்றுக் குடியிருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் என்எல்சி (NLC) நிறுவனத்தின் சமூக பொறுப்பு (CSR) நிதியிலிருந்து நான்கு புதிய வகுப்பறைகள் அமைக்க அடிக்கல் நாட்டு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ, என்எல்சி இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.