காட்டுமன்னார்கோயில் - Kaatumannarkovil

வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் கீழணை உள்ளது. ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மேட்டூர் அணையின் நீர் மட்டத்துக்கு ஏற்ப கீழணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து பாசனத் துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கீழணையின் நீர் மட்டம் 8. 10 அடியாக இருந்த நிலையில் பாசனத்துக்கு தண் ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் கீழணை, வீராணம் ஏரியில் இருந்து பாசனத் துக்கு தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

வீடியோஸ்


హైదరాబాద్