கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பால் இந்த ஆண்டில் முதல் முறையாக அதன் முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இது மட்டும் இல்லாமல் லால்பேட்டை வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் மற்றும் சென்னை மாவட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வீராணம் ஏரியில் நீர்மட்டம் அதிகரித்தது காணப்படுவதால் கடல் போல் காட்சியளிக்கிறது.