இந்தி திணிப்பு: பாரதிதாசன் கவிதையை பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்

59பார்த்தது
இந்தி திணிப்பு: பாரதிதாசன் கவிதையை பகிர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாரதிதாசன் கவிதையை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில்,

“இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை
ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?” என்ற கவிதையை பகிர்ந்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி