பிரயாக்ராஜில் கோடிக்கணக்கானோர் நீராடியதால் மனிதக் கழிவுகள் மூலம் பரவும் 'ஃபீக்கல் கோலிஃபார்ம்' நுண்ணுயிரிகள் அதிகரித்திருப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இதற்கு பதிலளித்த உ.பி,. முதல்வர் யோகி ஆதித்யநாத், "இதுபோன்ற அறிக்கைகள் ஒரு அவதூறு பிரசாரம். கும்பமேளாவை அவமதிக்கும் பிரசாரம். உண்மையில் பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான். ஏன் குடிக்கவும் உகந்ததுதான்" என கூறியுள்ளார்.