கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.