காட்டுமன்னார்கோவில்: அரசு கல்லூரி கட்டிடம் திறந்து வைப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் குமராட்சி பகுதியில் ரூபாய் 797. 90 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட அரசு கலை கல்லூரி திறப்பு விழா முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். அப்போது உடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், உயர்கல்வி துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். இந்த நிலையில் கல்லூரி திறப்பு விழாவில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ மற்றும் சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மி ராணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.