கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி, பண்ருட்டி, புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் தற்போது பனிப்பொழிவு தாக்கம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.