கடனுக்கு மளிகைப் பொருட்கள் தராத வியாபாரிக்கு அடி.. திமுக நிர்வாகிகள் கைது

59பார்த்தது
கடனுக்கு மளிகைப் பொருட்கள் தராத வியாபாரிக்கு அடி.. திமுக நிர்வாகிகள் கைது
சிவகங்கை: தேவகோட்டை ராம் நகரைச் சேர்ந்த திமுக வட்டச் செயலாளர் அப்துல் ஜாபர் (40). இவர், அயூப்கான் (33) என்பவர் நடத்தி வரும் மளிகை கடையில் பணம் கொடுக்காமல் பொருட்கள் வாங்கி வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து, அப்துல் ஜாபரின் மகனும் கடனுக்கு பொருட்கள் கேட்டதால், அயூப்கான் தர மறுத்துவிட்டார். இதனால், அப்துல் ஜாபர் மற்றும் திமுக முன்னாள் இளைஞரணி நிர்வாகி லெட்சுமணன் (43) ஆகியோர் சேர்ந்து அயூப்கானை தாக்கிய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி