கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வீராணம் ஏரியிலிருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் ரெட்டாவாய்க்கால் வழியாக T. புத்தூர் ஊராட்சி உட்பட்ட மாகொத்தங்குடி புதுதெருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவு சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியேற முடியாத சூழ்நிலை இருந்துவந்த நிலையில் குமராட்சி வடக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி முன்னிலையில் புத்தூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால், பிஸ்கட் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.