திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெங்காயம் மண்டிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். அந்த வகையில், இன்றும் (பிப்.,19) பல்வேறு மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் வந்து இறங்கியது. ஆனால், கடந்த நாட்களை விட அதிக அளவு வெங்காயம் வந்துள்ளது. இதன் காரணமாக ரூ.70க்கு விற்ற வெங்காயம், இன்று கிலோ ரூ.45க்கு வீழ்ச்சி அடைந்தது. மேலும், இந்த அதிகமான வரத்து இருந்ததால் 50 டன் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.