கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் காட்டுமன்னார்கோவில் பெருந்தலைவர் எம். ஆர். கே கூட்ட அரங்கத்தில் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கழக துணை செயலாளர் அ. ஞானமுத்து தலைமையில் நடைபெற்றது.
கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், திராவிட முன்னேற்றக் கழக பொறியாளர் அணி தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை. கி. சரவணன், மாவட்ட கழக பொருளாளர் எம். ஆர். கே. பி. கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் முதலமைச்சர் வருகை குறித்து பேசப்பட்டது.