ICC சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேல ஜெயவர்த்தனே, 22 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் 15 கேட்சுகளை பிடித்திருக்கிறார். இதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். தொடர்ந்து, நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், இந்திய வீரர் சவுரவ் கங்குலி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ ஆகியோர் தலா 12 கேட்சுகளைப் பிடித்துள்ளனர்.