கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன் இருசக்கர வாகனத்தை விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் டாஸ்மாக்கடை அருகில் நிறுத்தி விட்டு தூங்கினார். பின்னர் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்தனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாரதிராஜா, ராஜ்குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.